திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ளது ராக்போர்ட் வியூ ஒட்டல். இந்த சொகுசு ஒட்டல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ஹாரத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் என்பவருக்கு சொந்தமானது. இந்த ஓட்டலில் தீடிர் என காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல அறந்தாங்கியில் உள்ள இவருடைய வீடு, இவர் மாமனார் சுப்ரமணியன் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவர் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் மிகப்பெரிய ஓட்டல் ஒன்றை திறந்துள்ளார். ரமேஷ்குமார் தினகரன் கட்சியை சேர்ந்த மணல் கார்த்திக்கு மிகமிக நெருக்கமானவர்.
சமீபத்தில் எம்.எல்.ஏ. பதவியிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் நீக்கம் செய்ய கையெழுத்திட்டால் கையை வெட்டுவேன் என்று சொன்ன அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதியின் தம்பி தான் மணல் கார்த்தி.
ரெத்தினசாபாதி எம்.எல்.ஏ. தேர்தலுக்கு ரமேஷ் தான் தேர்தல் பணியை முழுவதும் செய்தார். இந்தமுறை தேர்தலுக்கும் ரமேஷ் தான் முழுமையாக செலவுகளை செய்ய போகிறார் என்றும் அதற்கு தேவையான பணம் இந்த ஓட்டலில் தான் பதுக்கி உள்ளார் என்கிற தகவலால் சோதனை நடத்தியாக வெளியே தகவல் பரவி வருகிறது.
ரமேஷ்குமாருக்கு அறந்தாங்கி மட்டுமல்லாது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதிலும் மணல் குவாரிகளை கவனித்து வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கு நெருக்கமானவர் ரமேஷ்குமார் கடந்த ஆட்சியில் ஜெ. போட்ட மணல் வழக்குகளில் தினகரன், ரமேஷ், கார்த்தி ஆகியோர் மீது மணல் வழக்குகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.. தமிழம் முழுவதும் உள்ள மேம்பாலங்கள் கட்டுவதற்காக பெரிய ஒப்பந்தகாரர்கள். என்கிறார்.
சபாநாயகர் கையை வெட்டுவேன் சொன்னேன் ரத்தினசபாபதியின் பேச்சு சமீபத்தில் அதிமுகவினர் இடையே பெரிய உஸ்னத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்தே இந்த ரெய்டுநடந்தாக சொல்கிறார்கள்.