Advertisment

ஐ.டி ரெய்டில் சிக்கிய கடலூர் அதிமுக பிரமுகர்கள்...

IT raid on AIADMK leaders' house in Cuddalore

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனானதொகுதிப் பங்கீடுமுடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்றபணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Advertisment

இந்நிலையில்,கடலூரில்அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. கடலூரில் மொத்தம் 6 இடங்களில் 7 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கடலூரில் அதிமுக சார்பில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிடும் நிலையில், அவரின் ஆதரவாளர்களானசரவணன், மதியழகன், பாலகிருஷ்ணன், சுரேஷ், தமிழ்செல்வன் ஆகியோரதுவீடுகளில் காலை 10மணி முதலே சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக வருமான வரித்துறை சார்பில் எந்தத்தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் புகாரின் அடிப்படையில்தான் இந்த சோதனை நடைபெற்றதாகவருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

it raid tn assembly election 2021 Cuddalore admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe