admk

ஓபிஎஸ்சுக்கு தினந்தோறும் ஆதரவு அதிகரித்து வருவதாக வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஓபிஎஸ்-இன் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், ''எல்லா மாவட்டத்திற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதுபோல் ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேவைப்படும் பொழுது பொதுக்குழுவை உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் கூட்டுவோம். அடுத்த கட்ட நகர்வு என்பது அதிமுகவேநாங்கள்தான் என நிரூபிப்பதுதான். ஒன்றரைகோடி தொண்டர்களில் 80 சதவீதம் பேர் ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கிறார்கள். கடந்த 10 நாட்களுக்குள் எங்களுக்கு ஆதரவு தினந்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது'' என்றார்.

Advertisment

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'டி.டி.வி.தினகரன் ஓபிஎஸ்-ஐ ஆதரிக்கும் படி பேசி வருகிறாரே அவரும் ஓபிஎஸ்சும் இணைய வாய்ப்பு இருக்கிறதா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு 'கட்சித்தலைமை எடுக்கும் முடிவு தான் இறுதியான முடிவு' என்றார். நிச்சயமாக உங்களிடம் தெரிவித்துவிட்டு மாபெரும் சுற்றுப்பயணத்தை ஓபிஎஸ் நல்லவிதமாக நிறைவேற்றுவார் என்றும் கூறினார்.