திமுகவின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்லத் திருமணம் இன்று திருப்பூரில் நடைபெற்றது. இத்திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

முன்னதாக இத்திருமண விழாவில் பேசிய பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான கோவை சி.பி. ராதாகிருஷ்ணன் ''கலைஞருக்கு பிறகு தமிழகத்தில் எங்கள் கட்சியான பாஜகவை வீழ்த்தியவராக திமுக. தலைவர் ஸ்டாலின் விளங்குகிறார் " என்றார்.

 It is the people who defeated the BJP ... Stalin's response to CP Radhakrishnan at wedding ceremony

Advertisment

Advertisment

அதனையடுத்து மணமக்களை வாழ்த்தி பேசிய மு.க.ஸ்டாலின் " வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளிலிருந்து தமிழகத்தில் முதலீடுகள் கொண்டு வருவதாக சொல்கிறார். சென்ற வருடம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டதாகவும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் வந்ததாகவும் கூறுகிறார். எங்கு? எந்த ஊரில் என்ன தொழிற்சாலை வந்தது? இதற்கு எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை தர வேண்டும் என ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் கூறியதற்கு பதில் இல்லை.

வெளிநாட்டு டூர் மூலம் ஏமாற்று அறிவுப்புக்களை வெளியிடுகிறார் எடப்பாடி." என்றவர் மேலும் " இங்கு பாஜக. சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது பாஜகவை திமுகதான் வீழ்த்தியதாக கூறினார் அதில் ஒரு திருத்தம் திமுகவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் அதே நமது தமிழக மக்கள்தான் பாஜகவை வீழ்த்தினார்கள்." என்று பதில் கூறினார்.