Skip to main content

“அதிகாரிகளே சாதிய வன்கொடுமையோடு செயல்படுவது வேதனை அளிக்கிறது..” - ஊராட்சி மன்றத் தலைவரின் ஆதங்கம்

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

"It is painful for the authorities to commit caste-based  activity" - Panchayat President

 

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருள்நீக்கி ஊராட்சி மன்றத்தலைவராக இருந்துவருபவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த செங்கொடி குமாரராஜா. இவர் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என பல்வேறு அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்காகவும், பொது சுகாதாரத்தைப் பேணி பாதுகாத்திடவும் தொடர்ந்து அரசிடம் முறையிட்டுத் தேவையான திட்டங்களைப் பெற்று செயல்படுத்தியும் வருகிறார். 

 

அந்த வகையில், இருள்நீக்கி ஊராட்சியில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் இருக்கின்றன. அந்தக் குளங்களில் பெரும்பான்மையான குளங்கள் ஏலம் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாயில் ஊராட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்திவருகிறார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இந்தநிலையில், ஊராட்சிக்கு சொந்தமான மேலும் 5 குளங்களை ஏலம்விட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று நேற்று (18.10.2021) ஏலம் விட அறிவிப்பு வெளியாகியிருந்தது. 

 

ஆனால், இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளின் துணையோடு குளத்தை ஏலம்விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.  

 

மேலும், கோட்டூர் வட்டார ஊராட்சி அலுவலரான சாந்தி உத்தரவின் பேரில் இன்று நடைபெற இருந்த குளம் ஏலம் நிறுத்தப்படுவதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தின் தகவல் பலகையில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நோட்டீஸையும் ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கு கூடியிருந்த இருள்நீக்கி கிராம மக்கள் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டு அதிருப்தியடைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்விட்டு,  ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதுகுறித்து இருள்நீக்கி ஊராட்சி மன்றத் தலைவரான செங்கொடி குமாரராஜா கூறுகையில், "பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் பட்டியல் சமூகத்து மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாத வன்கொடுமையான நிலையைக் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் திராவிடமும் கம்யூனிசமும் இருகுழல் துப்பாக்கியாக இருந்து போராடிய திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்களான நாங்கள்  போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடுகிறோம்.

 

"It is painful for the authorities to commit caste-based  activity" - Panchayat President

 

ஆனால் செயல்படவிடாமல் ஆதிக்க சமூகத்தினர் பல நெருக்கடிகளைக் கொடுப்பது பல இடங்களிலும் நடக்கிறது. எங்க ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஏலம் விடாதபடி ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அதிகாரிகளே நிற்கிறாங்க. ஊராட்சி நிர்வாகத்தை செயல்படவிடாமல் முடக்குறாங்க. அதிகாரிகளே சாதிய வன்கொடுமையோடு செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை நாளை (19ஆம் தேதி) ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் போகிறேன். பஞ்சாயத் ராஜ் சட்டத்தின்படி ஊராட்சி மன்றத் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டப்போதிலும் தமிழகத்தில் சாதியின் பெயரால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தில் ஊரில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தலையிடுவது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகளே அரசுக்கு சொந்தமான குளத்தைத் தனியாருக்கு சொந்தமானது என கூறி ஊராட்சி நிர்வாகத்தை முடக்க நினைப்பது வியப்பாக இருக்கிறது. பிரச்சனையை மக்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்" என்கிறார் ஆதங்கமாக. 

 

இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏதும் வந்திடாமல் தடுக்கும் விதமாக போலீசார் அங்கு குழுமியிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
case filed against suspended govt college principal

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் கீதா. இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகவும் பொறுப்பு பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி மோசடி மற்றும் நிர்வாக சீர்கேடு காரணமாக எழுந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் (01.02.2024) இவர் மீண்டும் கல்லூரியின் முதல்வராக பதவியேற்றார். அதே சமயம் தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தனராஜன், திரு.வி.க. அரசு கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் முதல்வர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து தனராஜன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் தஞ்சை மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜன் புகார் தெரிவித்துள்ளார். இதனயடுத்து கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

வெடிக் கடையில் பட்டாசுகள் வெடித்து விபத்து

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

thiruvarur valanfgaimaan shop incident

 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் செந்தில் குமார் என்பவர் வெடிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து தீ மளமளவெனக் கடை முழுவதும் பரவியது. இதனால் கடையிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

 

இது குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வெடிக் கடைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.