ADVERTISEMENT

இவ்வளவு பாதிப்பில் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது சரியா? -ஸ்டாலின் கேள்வி

08:12 PM Jun 08, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. வழக்கானது ஜூன் 11ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு 'கிரேடு' வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானாவை பின்பற்றி தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.


மேலும் அந்த அறிக்கையில், பத்தாம் வகுப்பு தேர்வில் தெலுங்கானா காட்டும் வழியை தமிழக அரசு பின்பற்றவேண்டும். 3,650 பேர் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது சரியா என கேள்வியெழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT