கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள், அவரது சகோதரர் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாக சோதனை செய்து வருகின்றனர். சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கியதாகவும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் 14க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை அருகே அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் கட்டி வரும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். இன்று காலை நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது நோட்டீஸானது ஒட்டப்பட்டுள்ளது. அதில் கரூர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.