Skip to main content

காவிரி பிரச்சனைக்காக ஐ.பி.எல் போட்டியை நிறுத்துவது சரியல்ல: ஈ.வி.கே.எஸ்!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018


தமிழக மக்கள் திருடனையும் எச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால், திருடனை விட்டுவிட்டு, எச்.ராஜாவையே விரட்டி, விரட்டி அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நாகைமாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,”காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக மக்களை வேண்டுமென்றே ஏமாற்றி வருகிறது. தமிழிசை சவுந்தராஜன் மூன்று வாரத்திற்குள் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியிருக்கிறார்.

பாஜகவினருக்கு பொய்சொல்வதே பிழைப்பாகிவிட்டது. மோடி விரைவில் வரவிருக்கிறார். அவருக்கு தகுந்த பாடம் தமிழர்களால் கற்பிக்கப்படும். ஆளும் அதிமுக பி.ஜே.பியின் காலடியிலேயே கிடக்கிறது. அவர்கள் உண்ணாவிரதம் இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம்.

பெரியார் சிலை உடைப்பு பற்றி பேசியதில் இருந்து திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாக பார்த்தால் திருடனை விட்டுவிட்டு எச்.ராஜாவையே அடித்து துவைக்கும் நிலை உருவாகியுள்ளது. அதோடு காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை தொடர்பாக சென்னையில் ஒதுக்குப்புறமாக நடக்க இருக்கும் ஐ.பி.எல் போட்டியை நிறுத்த வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல.

உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் இந்தியாவில் பெட்ரோல், கேஸ், விலை உயர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ராகுல் காந்தி அல்ல,’’என்றார்.

சார்ந்த செய்திகள்