கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கரோனாபரவியது. எனவே தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கபடமாட்டாது என தெரிவித்துள்ளார்.
எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என அரசு நவம்பர் 11 தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த கருத்தினை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.