Advertisment

'யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது'- உயர்நீதிமன்றக் கிளை திட்டவட்டம்! 

'It is not possible to decide on granting bail to Yuvraj' - High Court branch plan!

Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து முடிவெடுக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை கீழமை நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்யக்கோரியும், பிணை வழங்கிட வேண்டுமென்றும் 10 பேரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு பிணை வழங்குவது குறித்து, முடிவெடுக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் இருந்து பெறவும் நீதித்துறைப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை வரும் ஜூலை 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Yuvaraj judgement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe