நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த நினைப்பது எளிதில் சாத்தியப்படாது ஒன்று என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தப்படம் என திட்டமிட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. மனிதவள மேம்பாட்டு நிபுணராக, ஆன்லைனில் நீட் தேர்வை நடத்துவது என்பது அவ்வளவு எளிதாக சாத்தியமல்ல என்பது என் கருத்து.

Advertisment

ஐஐம் தேர்வை ஆன்லைனில் முழுமையாக கொண்டுபோகும் முயற்சி மிக பெரிய தோல்வியில் முடிந்தது. இந்த தேர்வை ஒரு 5 லட்சம் பேர் எழுதுவர். நீட்டுக்கு அதைவிட பன்மடங்கு அதிகமானோர் தேர்வு எழுதுவார்கள். அப்படி இருக்கையில், இந்தியாவில் இது அவ்வளவு எளிதாக சாத்தியப்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.