Advertisment

'' பிரதமர் பிறந்தநாளில் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை'' - நீதிமன்றம் கருத்து!   

Advertisment

பிரதமர் மோடி பிறந்தநாளில் மாட்டுவண்டி பந்தயம்நடத்த அனுமதிகோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று நெல்லையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதிகோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது அதில் பாரபட்சம் கட்டக்கூடாது. பிறந்தநாள் விழா என்றால் இனிப்புகள் வழங்கலாம், நலத்திட்ட உதவிகளை வழங்கலாம் மாட்டு வண்டி பந்தயம் தான் நடத்த வேண்டும் என்பதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Celebration birthday modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe