NN

'சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையின் மீது பக்தர்களை ஏறி தரிசனம் செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதில் நடராஜ தீட்சதர் என்பவர் பொது தீட்சிதர் குழுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இதற்குஎதிராக இந்து சமய அறநிலைத்துறை அணையிரிடம் நடராஜ தீட்சதர் மேல்முறையீடு செய்திருந்தார். அது தொடர்பான புகார் கடலூர் இணை ஆணையர் விசாரித்து நடராஜன் தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர் குழுவுடைய செயலாளர் வெங்கடேஷ் தீட்சிதர் என்பவர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி எம்.தண்டபாணிக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நடராஜ தீட்சிதர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தீர்ப்பு பிறகு கோவில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், இதனை நீதிமன்றம்தான் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தீட்சிதர்களால்தனக்கு நேர்ந்த சம்பவத்தைகுறிப்பிட்டு கருத்து தெரிவித்தநீதிபதி, 'மன கஷ்டங்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீட்சிதர்களால் அவமானப்படுத்தப்படுகின்றனர். அந்த அளவிற்கு தீட்சிதர்கள் ஆணவத்தோடு நடந்து கொள்கின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி அல்ல. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டை போடுவதற்கு வருவதை போலவே தீட்சிதர்கள்நினைக்கின்றனோரோ என எண்ணத்தோன்றுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்று நினைத்து தீட்சிதர்கள் தங்களை கடவுளுக்கு மேலாக நினைத்து வருகின்றனர். காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும். காசு கொடுக்கவில்லை என்றால் விபூதி கூட கிடைக்காது. பக்தர்கள் வரும் வரை தான் கோவில். இல்லாவிட்டால் கோவில் பாழாகிவிடும்' என வெளுத்து வாங்கினார்.

Advertisment

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் உள்ளே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்ததால் அவரை தாக்க முயன்ற காட்சிகள் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.