Advertisment

"மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும், சாத்தியமும் அல்ல"- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை!

Advertisment

publive-image

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி குறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் இன்று (19/11/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டுக்கே முன்னோடியாக பெட்ரோல் மீதான மாநில வரியை ரூபாய் 3 குறைத்தோம்; இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி இழப்பு; நிதி நெருக்கடிச் சூழலிலும் தமிழ்நாடு அரசு இதனை ஏற்றுக் கொண்டது.

Advertisment

01/08/2014 அன்று பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை மற்றும் சர்வதேச இறக்குமதி விலை ரூபாய் மதிப்பில் இன்றைய விலை நிலவரத்திற்கு நிகராக இருந்தது.

2014- ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும். 2014- ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது (அடிப்படை விலை ஏறத்தாழ சமமாக இருந்தபோது) பெட்ரோலுக்கு ரூபாய் 18.42-ம், டீசலுக்கு ரூபாய் 18.23- ம் கூடுதலாக மத்திய அரசு விதித்து வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்தது; இதை மீண்டும் 2014-ல் இருந்த அளவுக்கு குறைத்துக் கொண்டால் மாநில வரி விதிப்பு தானாகவே குறையும்; இதனை மத்திய அரசு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் வரி அளவு இன்னும் அதிகமாக தொடர்ந்து இருந்து வரும் நிலையில், மாநில அரசின் வரி அளவு மேலும் குறைக்கப்படுவது நியாயமும், சாத்தியமும் அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

minister petrol Diesel ptr palanivel thiyagarajan
இதையும் படியுங்கள்
Subscribe