Advertisment

“பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றிப் பேசினால் மட்டும் போதாது” - பாமக அன்புமணி ராமதாஸ்

nn

'நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கர்,காமராஜர்பற்றிப் பேசினால் மட்டும் போதாது;அவர்களது கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார்கள். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஒதுங்கிவிட்டார். இப்பொழுது அமைச்சர் முத்துசாமி அந்த 500 கடைகள் என்னவென்று அறிவித்தார். இந்த 500 கடைகளில் வட தமிழ்நாட்டில் வெறும் 65 கடைகள்தான். மது விற்பனை அதிகமாக நடப்பது வட தமிழ்நாட்டில் தான். அப்படிப்பட்ட வட தமிழ்நாட்டில் வெறும் 65 கடைகளை மட்டும்தான் நீங்கள் மூடி இருக்கிறீர்கள் என்றால் உங்களின் நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை.

Advertisment

மதுரையில் 125 கடை, திருச்சியில் 100 கடை, கோயமுத்தூரில் 100 கடை, சென்னையில் 120 கடை இப்படி மூடிவிட்டு வட தமிழ்நாட்டில் வெறும் 65 கடைகளை மட்டும் மூடினால் இது சரியில்லாத ஒரு நோக்கம். வருமானம் குறைவாக உள்ள கடைகளைத் தான் மூடி உள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறார். ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என்று. இப்பொழுது கேட்டால் நாங்கள் சொல்லவே இல்லை என்று சொல்கிறார்கள்.

கனிமொழியே இதைத்தான் செல்கிறார். அவர்தான் இன்னும் களத்தில் இறங்கி தமிழக பெண்களின் தாலிக்காக போராட வேண்டும். அவரே சொல்கிறார், திமுகவில் நாங்கள் மதுவிலக்கு பற்றிப் பேசுவதே கிடையாது. நாங்கள் எதுவுமே சொல்லவில்லை என்று. திமுகவும் மதுவிலக்கு தொடர்பாக வாய் திறக்க மாட்டேங்குது'' என்றார்.

தொடர்ந்து விஜய் குறித்தகேள்விக்கு, ''தந்தை பெரியார் பற்றியோ, அண்ணல் அம்பேத்கரை பற்றியோ, கர்மவீரர் காமராஜரை பற்றியும் பேசினால் போதாது; அவர்களது கொள்கைகளை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

anbumani pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe