ias

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு ஐஏஎஸ் எழுதிய 'மூளைக்குள் சுற்றுலா' என்றநூலைசிறந்த நூலாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் ஆகியோருக்கு நாளை நடைபெறும் விழாவில்பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

Advertisment

ias

இந்நிலையில் தனது நூலான மூளைக்குள் சுற்றுலா எனும் தலைப்பிலான நூலை சிறந்த நூலாக தேர்வுக்குழுவினர் தேர்தெடுத்து பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்த நிலையில், தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் நிலையில் தமிழக அரசின் பரிசுத்தொகையை பெற்றுக்கொள்வது ஏற்புடையதாக இருக்காது என மறுத்து தமிழ் வளர்ச்சித்துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்பொழுது வைரலாகி வருகிறது. ஏற்கனவே அரசு விழாக்களில் தான் எழுதிய புத்தகத்தை பரிசாக கொடுக்க வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment