
சென்னையில் 10 கோடி அளவில் ஹவாலா பணம் கைமாறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள யாகூப் என்பவர் வீட்டில் இந்த சோதனையானது நடைபெற்றது. 10 கோடி அளவில் ஹவாலா பணம் கைமாறுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது வரி ஏய்ப்பு செய்து இந்த பணம்கைமாற்றப்படுவதாக தகவலறிந்து அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பெட்டிக்கடையில் கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிந்தது.விசாரணையில் மொத்தம் 50 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
பிடிப்பட்ட பணத்தோடு 9.50 கோடி ரூபாய் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு போலி நோட்டுகளும் இருந்தது தெரியவந்தது. என்.ஐ.ஏ அதிகாரிகளும் இதில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 50 லட்சம் ரூபாய்க்கு போதிய ஆவணங்கள் இல்லாததால்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு நபர்களை ராயப்பேட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)