உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு, மறுபரிசீலனை எல்லாம் முடிவடைந்த நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு திட்டம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கொடுப்பதை போல் இருந்துவிடக்கூடாது. எனவே உள்ளாட்சி தேர்தல் முடியும் வரைபொங்கல் பரிசு திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என திருவண்ணாமலையை சேர்ந்த அலமேலு என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக்கொண்டதுநீதிமன்றம்.நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று மதியம் 2.15 க்கு விசாரணைக்கு வருகிறது இந்த மனு.
உள்ளாட்சி தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தர தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது குறிப்பிடக்கத்தக்கது.