Advertisment

'ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது'- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

 'It is the life of every human being' - Chief Minister M. K. Stalin's greeting

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 385 வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்திற்கு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், 'சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!' என தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்று அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள் குறித்த புகைப்படத் தொகுப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Advertisment

TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe