Skip to main content

தலைவருக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்டவிரோதமா? - பாஜக அண்ணாமலை கேள்வி!

Published on 23/07/2021 | Edited on 23/07/2021

 

bjp annamalai

 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு மதுரை விமானம் நிலையம் முதல் மாநகர் முழுவதிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதோடு, ஆங்காங்கே வாகன தணிக்கைகளும் நடத்தப்பட்டது. இதேபோல் அவர் தங்கும் விடுதிகளிலும் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

 

மேலும், மதுரை மாநகராட்சி சார்பில் விமான நிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளைச் சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளைப் பராமரிக்கவும், அவரின் வருகையின்போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதைக் கண்காணிக்கவும் மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சியின் உதவி ஆணையாளர் சண்முகம் (பணியமைப்பு) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

மதுரை மாநகராட்சியின் உத்தரவு குறித்து மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து, துணை ஆணையர் சண்முகத்திற்கு பணி விடுவிப்பு கொடுக்கப்பட்டது.

 

இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. துணை ஆணையர் சண்முகத்தின் பணி விடுவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தலைவருக்காக வழக்கமான நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளனர். பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவருக்கு உரிய வசதி செய்துகொடுப்பது சட்டவிரோதமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.