Skip to main content

ஒ.எம்.ஆர். தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடா...?? புதிய சர்ச்சையில் நீட்!!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
Is it illegal to change OMR sheets ... ?? Neet

 

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், நாடு முழுவதும் நீட் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

 

வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை என  கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் புகார் அளித்துள்ளார். அசல் ஒ.எம்.ஆர். விடைத்தாள் வழங்க வேண்டும் என மாணவ மாணவியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர், விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக சில மாணவர்கள் புகாரும் தெரிவித்துள்ளனர். 

 

தனது ஓ.எம்.ஆர் தாள் மாற்றப்பட்டுள்ளது என அரியலூர் மாணவி மஞ்சுளா புகார் தெரிவித்துள்ளார். அதேபோல் ஓ.எம்.ஆர். விடைத்தாள் தன்னுடையது அல்ல என கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் புகார் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்கள் தேசிய தேர்வு முகமைக்கு  மின்னஞ்சல் வழியாக தங்களது புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்