Advertisment

'அது என் பர்மிஷனில் நடந்தது'-ஊராரை மிரள வைத்த மாணவி; குழப்பத்தில் போலீசார்   

nn

விருத்தாசலம் அருகே தனியார்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தலைமை ஆசிரியரை கிராம மக்கள் அடித்து இழுத்து வந்த சம்பவத்தில் இதில் தொடர்புள்ள சிறுமி கொடுத்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் செயல்படும் தனியார்ப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பென்னிக்ஸ் என்பவர் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது. மாணவி ஒருவரும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரும் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், கிராம மக்களும் பெற்றோர்களும் இணைந்து அவரை அடித்து இழுத்து வந்தனர்.

Advertisment

அரைகுறை ஆடைகளுடன் சாலையில் பொடி நடையாக நடக்க வைத்தே அழைத்து வந்து காவல்நிலைய வாகனத்தில் ஏற்றிவைத்தனர். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் அடித்து இழுத்து வரக்கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அடித்து இழுத்து வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் நிலையத்தின் முன்பாக ஊர்மக்கள் சூழ்ந்திருக்க பரபரப்பான சூழலில் சம்பந்தப்பட்ட மாணவியும்அங்கு அழைத்து வரப்பட்டார். அப்பொழுது அந்த மாணவியிடம் போலீசார் ஊர்மக்கள் முன்பே விசாரணை நடத்தினர். 'கம்ப்ளைன்ட் வாங்கி இருக்கோம். அரெஸ்ட் பண்ணலாம்னு இருக்கோம்' என காவல்துறையினர் சொல்ல, ''யார நீங்க அரெஸ்ட் பண்ணப் போறீங்க. அவரை அரெஸ்ட் பண்ணக் கூடாது. அது என் பர்மிஷனில் நடந்தது. அவரை எப்படி அரெஸ்ட் பண்ணுவீங்க? எனக்கு பிடித்திருந்தது நான் அவரை லவ் பண்றேன்'' என்று சொல்ல சுற்றியிருந்த ஊர் மக்கள், அந்த பெண்ணை திட்டி கையை ப்பிடித்து இழுத்துச் சென்றனர். சம்பந்தப்பட்ட மாணவிக்கு 19 வயது என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசாரும் புலம்பித் தவித்து வருகின்றனர்.

police Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe