
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றிபெற்ற திமுக கூட்டணி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார்.

இந்நிலையில் பல்வேறு அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து தொடர் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. தற்போதுகூட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும் கரோனா தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றாததுதிருப்தி அளிக்கிறது எனச் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)