'அபாய கட்டத்தை தாண்டியது மகிழ்ச்சியளிக்கிறது' -வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த் 

'It is gratifying that he has crossed the danger line' - Rajinikanth who released the video

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

இதையடுத்து கரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பி. குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா உட்பட இசையுலக பிரபலங்கள், பாடகர்கள்,இசை பிரியர்கள் என அனைவரும் தங்களது கோரிக்கைகளை வீடியோ வாயிலாகவும்,சமூக வலைதள பதிவுகள் வாயிலாகவும் பிரார்த்தித்து வருகின்றனர்.

'It is gratifying that he has crossed the danger line' - Rajinikanth who released the video

இந்நிலையில்நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து திரும்ப வரவேண்டும். அவர்அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 50 ஆண்டுகளில் பல மொழிகளில் இனிமையான குரலில் பாடல் பாடி மக்களை மகிழ்வித்தஎஸ்.பி.பி விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

rajinikanth spb
இதையும் படியுங்கள்
Subscribe