Advertisment

சொந்த பயன்பாட்டிற்கு அரசு வாகனமா? - புகாரைத் தொடர்ந்து ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தம்

nn

ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான 32 வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று நடைபெற்றது.

Advertisment

ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான அரசு வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அரசு வாகனத்தைச் சொந்த பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தியது தெரிய வந்தது.

Advertisment

இதனையடுத்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, வாகனங்கள் முறையாக இயங்குகிறதா அல்லது விதிமுறைகளை மீறி இயங்குகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் ஊரக வளர்ச்சித் துறைக்குச்சொந்தமான வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான 32 வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கியது. மாதம் ஒரு முறை இந்த ஜிபிஆர்எஸ் கருவியைச் சோதனை செய்து வாகனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கியதா என்பதை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். இதில் விதிமுறைகள் மீறி இயக்கப்பட்டது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

vehicles Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe