தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இன்று தேனியில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ்-ஐ விடாக்கண்டன் எனவும் இபிஎஸ்கொடாக்கண்டன்எனவும் விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்துபோனால் திமுகவிற்கு நல்லதுதான். மோடி வந்து சென்றால் தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என அனைவருக்கும் தெரியும். மோடி, ஓபிஎஸ் ஆகிய இருவரும் 'ஜல்லிக்கட்டு நாயகன்' அல்ல. அதற்காகப் போராடி இளைஞர்கள்தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகர்கள்'' என்றார்.