Advertisment

"மதவேறுபாடு இன்றி உறவினர்கள் போல் பழகுவது மகிழ்ச்சியளிக்கிறது"- இப்தார் நோன்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்!

publive-image

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய சித்தையன் கோட்டைப் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (16/04/2022) நடைபெற்றது. இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மூத்தவல்லிகள் உதுமான் அலி, சேக்தாவூது தலைமை தாங்கினர். தி.மு.க.வின் மாவட்ட சிறுபான்மை நல துணை அமைப்பாளர் செல்லமறைக்காயர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக முகமது இலியாஸ் கலந்துகொண்டு நபிகள் நாயகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமி, "மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக சித்தையன் கோட்டை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள அனைத்து சமுதாய மக்களும் மதவேறுபாடின்றி உறவினர்கள் போல் பழகுவது, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. நபிகள் நாயகம் கூறியதுபோல அனைவரையும் சமமாக பார்க்கும் மனதுடன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு சேகரிக்க வந்த எனக்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் காட்டிய அன்பு என்றும் மறக்கமுடியாதது. கடந்த இரண்டு வருடங்களாக இப்தார் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. இவ்வருடம் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் தன்னை வருத்தி நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

minister
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe