Advertisment

குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்

கடையநல்லூரில் வெறி நாய் கடித்து இரண்டு குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது. இதில் இரண்டு குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டு இரண்டு பேரையும் மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஒரு குழந்தைக்கு காயம் அதிகமாக இருந்த நிலையில் அந்த குழந்தை மட்டும் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளைக் கடித்தவெறி நாயைப் பிடித்து வேறு இடத்தில் விட நகராட்சி நிர்வாகத்திற்கு அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

dog incident thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe