IT EMPLOYEE INCIDENT AND FAMILY POLICE INVESTIGATION

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பிரகாஷ். மென்பொருள் ஊழியரான இவருக்கு மனைவி காயத்ரி, மகள் நித்யஸ்ரீ, மகன் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், பிரகாஷ் வழக்கம் போல் காலை வீட்டை வெளியே வராததால், சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பூட்டியிருந்த பிரகாஷின் வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து பார்த்தனர். அப்போது, பிரகாஷ் மற்றும் அவரது மனைவி,குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டனர். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் ஆணையர் ரவி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, "மயக்க மருந்து தந்து விட்டு குடும்பத்தினரை மென்பொருள் ஊழியர் மின்ரம்பத்தால் கழுத்தறுத்துகொன்றாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. கொலைக்கு பயன்படுத்திய மின்ரம்பத்தை கடந்த மே 19- ஆம் தேதி அன்று ஆன்லைனில் வாங்கியுள்ளார் பிரகாஷ். மென்பொருள் ஊழியர் பிரகாஷின் வீட்டில் இருந்து ரூபாய் 3.50 லட்சம் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. கடன் பிரச்சனையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை தந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்பே தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.