வீட்டிலிருந்து வெளியான துர்நாற்றம்; காத்திருந்த அதிர்ச்சி - கே.கே நகரில் பரபரப்பு சம்பவம்!

IT employee found passed away inside house in trichy

திருச்சி கே.கே நகர் உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 40). ஐ டி ஊழியர். இவருக்கு திருமணமாகி மஞ்சு என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மஞ்சு தனது பிள்ளைகளுடன் திண்டிவனத்தில் உள்ள பெற்றோர்கள் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அதனால் ஹரிகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்பொழுது படுக்கை அறையில் ஹரிகிருஷ்ணன் இறந்து கிடந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக கேகே நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கே. கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணன் எப்படி இறந்தார்? இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Subscribe