Advertisment

நள்ளிரவில் ஐடி ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்! 

சென்னையை அடுத்துள்ள நாவலூரில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மலர், வயது 30 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தாழம்பூரில் வசிக்கும் தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

Advertisment

Blood

தாழம்பூர் - பெரும்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள், மலரின் பின்தலையில் இரும்புக்கம்பியால் பலமாக தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இரத்த வெள்ளத்தில் கிடந்த மலரை அருகில் இருந்த காலி இடத்திற்கு தூக்கிசென்று, அவரிடமிருந்த 15 சவரன் தங்கநகைகள், ரூ.40ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், மலர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. முழுமையான மருத்துவ அறிக்கைக்குப் பிறகே எந்தத் தகவலும் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு முழுவதும் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய மலரைப் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்பேரில், காவல்துறையினர் பெரும்பாக்த்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- சி.ஜீவா பாரதி

Chennai IT employee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe