மதுரை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு, தனது 69வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6tt66676.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது மறப்பது எளிதாகி விட்டது. அதற்கு நானே உதாரணம். அதிமுகவை சேர்ந்த எம்எல்.ஏ., எம்பிக்கள் எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால், என்கூட பழகியவர்கள், என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலைமை எப்போது மாறப்போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவு தான். நான் நினைத்ததை முடிப்பேன். மற்றவர்கள் மட்டும் தான் கலைஞரின் பிள்ளை அல்ல ; நானும் கலைஞரின் பிள்ளை தான் என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தமிழ்நாடு இருக்க வேண்டுமானால் நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)