Advertisment

ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானதா?

தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது ரயில்வே நிர்வாகம். ஆனால் இந்த ரயில்வே பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பது பெரிய ஆபத்தில் முடியும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்

Advertisment

இது குறித்து நாம் அவரிடம் பேசுகையில்…

தெற்கு ரயில்வேயில் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் தண்டவாள பராமரிப்பாளர்கள், பாயிண்ட்ஸ் மேன்கள், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் துறை களாசிகள் பணியிடங்கள் பாதுகாப்பு துறைகளை சார்ந்தவை. இந்த பிரிவில் காலியிடங்கள் உள்ளதால் நிலமையை சமாளிக்க கடைநிலை ஊழியர்களாக 2393 முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க தற்போது முடிவு செய்து இருக்கிறது.

Advertisment

railway

மேலும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2020 ம் ஆண்டுதான் மீண்டும் கடைநிலை பணியாளர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் துவங்கும். இதனால் நிரந்தர ஊழியர்கள் நியமனத்திற்கு உடனடி வாய்ப்பு இல்லை.

இதற்கு முன்பு தினக்கூலி அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க பலமுறை ரயில்வே கோட்டங்கள் விளம்பரம் செய்தன. தினக்கூலிகளாக சேர அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கூடுதல் சலுகைகளை அறிவித்து தெற்கு ரயில்வே மூத்த பர்சனல் அதிகாரி இந்துமதி கடந்த ஆகஸ்ட் 13 ம் தேதி விளம்பரம் வெளியிட்டு இருக்கிறார். மாதாந்திர தொகுப்பு ஊதியமாக பெரு நகரங்களில் ரூ. 22072 , நடுத்தர நகரங்களில் ரூ. 24660 , சிறிய ஊர்களில் ரூ.22968 வழங்கப்படும் ரூ. 5000 சீருடைப்படி தரப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணிக்கு சென்று வர பயண பாஸ் வழங்கப்படும். பணி நியமத்தமாக வெளியூர்கள் சென்றால் ரூ.500 பேட்டா தரப்படும், வாராந்திர விடுப்பு வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. முப்படைகளில் ஏதாவது ஒன்றில் குறைந்த்து 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். விளம்பரம் வெளியான தேதியில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

நிர்வாகம் வேலையை விட்டு நீக்கினாலோ, இவர்கள் வேலையை விட்டு நின்றாலோ 15 நாட்கள் நோட்டிஸ் அவசியம். மூன்று நாட்கள் தொடர்ந்து பணிக்கு வரவில்லை என்றால் பணி நீக்கம் அதிகாரம் நிர்வாகத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்து இருக்கிறது.

அரசு, பொதுத்துறை மற்றும் தேசிய வங்கிகளில் நிரந்த வேலைகளை இட ஒதுக்கீடுகள் மூலம் பெற்று வருகிறார்கள். இதைவிட கூடுதல் சலுகைகள் வேலை உத்தரவாதம் என கருதுவார்கள். இந்த அறிவிப்பு மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் பாதுகாப்பு பணிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் ஆபத்தானது. பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்காத பட்சத்தில் நடவடிக்கைகள் எடுக்க இயலாது.

வாரியத்தை அணுகிசிறப்பு விலக்கு பெற்று கடைநிலை ஊழியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறது என்றார்.

staff thiruchy railway
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe