It and ed are all teams of BJP says Minister Udhayanidhi

நீட் விலக்கை வலியுறுத்தி50 நாட்களில்50 லட்சம் கையெழுத்திட்டுகுடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்க, கையெழுத்தியக்கத்தை இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். அதன் பணிகள் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மூத்தத்தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கையொப்பம் பெற்றுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் எ.வ. வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த சோதனையானது வழக்கமாக நடப்பதுதான்; திமுக, காங்கிரஸ் கட்சிகளில்எப்படி இளைஞரணி, மாணவரணி எனப் பல அணிகள் இருக்கிறதோ; அதேபோன்று பாஜகவில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்று அவர்களுக்கும் அணிகள் இருக்கிறது. அதனால் பாஜகவின் அணிகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அவர்களது பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் வருவதால் அந்த அணிகளுடைய(அமலாக்கத்துறை, வருமான வரித்துறை) செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று பதிலளித்தார் .

Advertisment