Advertisment

வில்லங்க நிலத்தை விற்ற விவகாரம்; நேரில் புகாரளித்த நடிகை கௌதமி

 The issue of sale of Villanga land; Actress Gauthami reported in person

வில்லங்கத்தில் உள்ள நிலத்தை ஏமாற்றி தன்னிடம் விற்றதாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் நடிகை கௌதமி புகார் அளித்துள்ளார்.

Advertisment

நடிகை கௌதமி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 64 ஏக்கர் நிலத்தை மூன்று கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியதாகக் கூறப்படுகிறது. காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் இந்த நில விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்டு கௌதமிக்கு இந்த நிலத்தை வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலம் முழுதாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது. அந்த இடத்தை விற்கவும் வாங்கவும் முடியாது எனச் 'செவி' என்ற அமைப்பு தடை விதித்திருந்த நிலையில், இதனைத்தனது கவனத்திற்கு கொண்டு வராமல் இடைத்தரகர் தன்னிடம் விற்றதாக கௌதமி புகார் அளித்துள்ளார்.

Advertisment

தன்னிடம் அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதை மறைத்த இடைத்தரகர் மற்றும் அதன் நிலத்தின் உரிமையாளர் ஆகிய இருவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னதாக மனு ஒன்றை கௌதமி அளித்திருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து நேரில் விசாரணை செய்வதற்காக அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று நடிகை கௌதமி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரானார்

police lands Ramanathapuram gowthami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe