Skip to main content

சிறுத்தைப் புலி உயிரிழந்த விவகாரம்; ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜர்

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

 The issue of the leopard; Ravindranath MP Appear in person

 

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் சிக்கி சிறுத்தைப் புலி உயிரிழந்த சம்பவத்தில் ஆடுகளுக்குக் கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. செப்டம்பர் மாதம் 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தைப் புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரைத் தாக்கிவிட்டுப் தப்பி ஓடிய அந்த சிறுத்தைப் புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கிக் கொண்டது. 

 

இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்குத் தற்காலிகக் கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிகக் கிடை அமைத்தவரைக் கைது செய்வதா எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வனத்துறை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது.

 

வேலியில் சிக்கியது இரண்டு சிறுத்தைப் புலிகள் என்றும் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொன்று தான் உயிரிழந்து விட்டதாக வனத்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜர் ஆகுமாறு வனத்துறை ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் ஆஜர் ஆனார். அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வனத்துறையினரின் கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் நிலையும் கூட” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு தண்டனை வழங்க வேண்டும் - சிவகங்கை காயத்திரி தேவி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

 Sivagangai Gayathri  Devi  Exclusive Interview

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி தேவியுடன் ஒரு நேர்காணல்...

 

என்னுடைய பூர்வீகம் காரைக்குடி. திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் சகோதரியுடன் எனக்கு நட்பு உண்டு. அதன் மூலம்தான் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ரவீந்திரநாத் எனக்கு அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். சமீபத்தில் அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. பாலியல் ரீதியாக அவர் பேச ஆரம்பித்ததும், அதை அவருடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அதற்கு முன்பு அவருடைய போனிலிருந்து அழைத்து அவருடைய ஆசையை மற்றவர்கள் என்னிடம் கூறினர்.

 

இதுபோல் இனி கால் வராது என ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் ஓபிஎஸ் அண்ணன் ஆகியோர் உறுதியளித்தனர். ஓபிஎஸ் மிகவும் வருத்தப்பட்டார். ஏப்ரல் மாதம் ஒருநாள் இரவு ரவீந்திரநாத் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ" என்றார். "உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் பேச வேண்டாம்" என்றேன். நான் சொல்வதை அவர் கேட்கவில்லை. "உன்னை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இப்போதே வண்டி அனுப்புகிறேன்" என்றார். எனக்கு விருப்பமில்லை என்பதை நான் தெரிவித்தேன்.

 

அதன் பிறகு அவர் ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். குடிபோதையில் பேசுபவர் போல் அவருடைய பேச்சு இருந்தது. அடுத்த நாள் எழுந்து பார்த்தால் அவரிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் இருந்தன. என்னிடம் அவர் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார். இவை அனைத்தையும் அவருடைய குடும்பத்தினரிடம் நான் தெரிவித்துவிட்டேன். அவரைத் திருத்தும் இடத்தில் ஓபிஎஸ் இல்லை. ரவீந்திரநாத்தும் திருந்துவதாக இல்லை. தன்னுடைய தவறை அவர் உணரவே இல்லை. அவருடைய நண்பர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்தன. அதன் பிறகுதான் புகார் கொடுக்க நான் முடிவு செய்தேன்.

 

எதற்காக நான் புகார் கொடுத்தேன் என்று ரவீந்திரநாத்தின் மனைவி என்னிடம் கேட்டார். அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் தான் நான் போலீசில் புகார் கொடுத்தேன். புகார் கொடுத்த பிறகு ரவீந்திரநாத்திடம் இருந்து எனக்கு கால் வந்தது. ஆனால் நான் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கு குறித்து ஓபிஎஸ் போராட்டம் நடத்தியதற்கும், அதே நாளில் நான் போலீசில் புகார் கொடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதார்த்தமாக நடந்ததுதான் அது. இதற்குப் பின்னால் யாரும் இல்லை. என்னுடைய புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ரவீந்திரநாத்துக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும்.
 

காயத்திரி தேவியின் முழுமையான நேர்காணலை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...

 

 

Next Story

ரவீந்திரநாத் சொத்துகள் முடக்கம்?

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Ravindranath assets frozen?

 

கல்லால் நிறுவன வழக்கில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

கல்லால் குழு அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் சொத்துகள் கல்லால் நிறுவனத்திடம் இருந்ததாகவும் அமலாக்கத்துறை அதை முடக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று கல்லால் நிறுவனத்திடமிருந்து ரூ.8.5 கோடி பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லைகா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி ஜி.கே.எம்.குமரனின் ரூ.15 கோடி மதிப்புள்ள தி.நகர் இல்லத்தையும் வழக்கில் இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.