Advertisment

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடிப்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில் நோன்பு தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார். அதேபோல் ஏப்ரல் 14 முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி 30 நாட்கள் நோன்பு முடியும் நாளான மே 14 ஆம் தேதி அன்று ரமலான் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், வெள்ளிக் கிழமையான இன்று இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர். அதேபோல் நியூ காலேஜ் வளாகத்திலுள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகையை சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.