Advertisment

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகைஇன்று (21.07.2021) கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

Advertisment

இதை முன்னிட்டு, டெல்லி உள்பட நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் தொழுகை நடைபெற்றது. அதேபோல் திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் பெருமளவு கலந்துகொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.