புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆர்.பாலகுறிச்சியை சுற்றி ரெகுநாதபட்டி, வைரம்பட்டி, சீகம்பட்டி, கோபால்பட்டி, வெடத்தலாம்பட்டி ஆகிய பல கிராமங்கள் ஆர்.பாலகுறிச்சி ஊராட்சிக்குள் உட்பட்ட கிராமங்கள் ஆகும். இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக கிராமத்தின் மத்தியில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதில் சிறப்பு தேர் , பொங்கல் திருவிழா, மஞ்சுவிரட்டு என பல திருவிழாக்கள் நடக்கும். இந்த திருவிழாக்களில் உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து முத்துமாரியம்மனை வழிபாட்டு செல்வார்கள்.

 Islamic youths who funded temple repairs PUDUKOTTAI DISTRICT

Advertisment

இந்த நிலையில் ஆவணி 27-ஆம் தேதி கோவில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டு திருப்பணிகளும் நடந்து வருகின்றது. திருப்பணிக்காக கிராமத்தார்கள் மட்டுமின்றி பலரும் நன்கொடைகள் வழங்கியுள்ளனர். இந்தநிலையில் தான் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நடந்தது. அதே ஊராட்சியை சேர்ந்த ரெகுநாபட்டியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஊராட்சியில்திருப்பணிக்காக மலேசிய நாட்டின் சாபா மாநிலத்தில் பணியாற்றும் இஸ்லாமிய இளைஞர் சுமார் 25,000 நன்கொடையாக வழங்கியுள்ளனர. இந்த சம்பவம் தான் உண்மையான மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இது குறித்து பேசிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி. இது எங்களின் சகோதரத்துவத்திற்கு கிடைத்த பரிசு. மத நல்லிணக்கதிற்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. கோவில் திருப்பணிக்காக யாரிடமும் விழா குழு நிதி கேட்கவில்லை. ஆனால் இஸ்லாமிய இளைஞர்கள் தானாக முன்வந்து நன்கொடை வழங்கியுள்ளது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Advertisment