Advertisment

ஈஷாவின் கார் மீது தாக்குதலா? கோவையில் பரபரப்பு...

இ

கோவை ஈஷா யோகா மையம் முன்பு நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டு இருந்த ஈஷாவின் காரை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.இது சம்பந்தமாக காருண்யா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கோவையில் ஈஷா யோக மையம் முன்பு நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று கற்களால் தாக்கி உடைபட்டு நின்றது.ஈஷாவுக்கு முன்பு உள்ள முள்ளாங்காடு பகுதியில் உள்ள அந்த ஹோட்டலின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த அந்தக் காரைத்தான் யாரோ சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர் .

Advertisment

i

சேதமான அந்த டி-போர்டு காரின் பின் கண்ணாடியில் ஆதி யோகி என எழுதப்பட்டிருந்தது.அது ஈஷாவுக்கு சொந்தமான கார் அல்ல.ஈஷாவுக்கு வாடகைக்குப் போய்க் கொண்டு வந்த கார் அது .

அது ஈஷா யோக மையத்தின் ஸ்டேண்டில் நிற்கும் கார்..என அவசர அவசரமாய் சொன்னது ஈஷா தரப்பு.ஆனால்…விசாரணையில் இருக்கும் ஆலாந்துறை போலீசார் நம்மிடம்..’’ஆறுக்குட்டி என்கிற இந்த காரின் ஓனர் பெயர்.அவர்தான் இந்தக் காரின் டிரைவர் .

ஈஷா நிர்வாகம் சிலரைத் தங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் என்று கணக்கிட்டு வைத்திருக்கும். அப்படி நம்பிக்கைக்குரியவர்களுக்கு முன்பணம் செலுத்தி அவர்களின் பெயரில் காரை எடுத்து கொடுத்து விடும் .

அவர்கள் மாதத் தவணையை மட்டும் கட்டிக் கொள்ள வேண்டும்.அப்படியான ஒரு காராகத்தான் இது இருக்க முடியும்.டிரைவருக்கு எதிரானவர்கள் தாக்குதல் நடனத்தினார்களா..? இல்லை, ஈஷாவை வெறுக்கிறவர்கள் யாராவது தாக்குதல் நடத்தினார்களா..? என்பதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் ரகசியமாய் .

Isha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe