சிவகங்கை மாவட்டத்திலுள்ள பாசாங்கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளப்பசாமி. சிவ பக்தரான இவருக்கு வயது 80. திருமணமாகி தனது குடும்பத்துடன் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்நிலையில் நேற்று இரவு 12 மணியில் இருந்து இன்று அதிகாலை 5.00 மணிக்குள் ஜீவசமாதி அடையவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சிவபெருமான் தன் கனவில் வந்து ஜீவ சமாதி அடைய சொன்னதாகவும் அவர் கூறியிருந்தார். கடந்த இரண்டு நாட்களாக இந்த செய்தி பரவியதால் இருளப்பசாமி ஜீவ சமாதி அடைவதை காண 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், பாசங்கரை கிராமத்தில் குவிந்தனர்.
இந்நிலையில் முதியவர் இருளப்பசாமியின் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருளப்ப சாமிக்கு இரவில் 7 முறை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் ஜீவசமாதி திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஜீவசமாதிக்காக பெரிய குழி தோண்டப்பட்டிருந்த நிலையில், காலையில் அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்பின் இருளப்பசாமி அளித்த பேட்டியில், “ 2045-ல் அதே இடத்தில் ஜீவசமாதி ஆவேன், அது வரை தொடர்ந்து தவம் மேற்கொள்வேன். நேரம் தவறியதால் தற்போது ஜீவ சமாதி அடைய முடியவில்லை” என்று கூறியுள்ளார். அதாவது அவருடைய 125வது வயதில்தான் இனி ஜீவசமாதியாக போவதாக தெரிவித்துள்ளார்.