Advertisment

அரசு மருத்துவமனையில் வயிற்றுவலிக்கு வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி!!

ராமநாதபுரம் ஏர்வாடி கிராமத்தில் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரையில் ஸ்டெப்லர் பின் அளவில் இரும்பு கம்பி இருந்தது அங்கு சிகிக்சை பெற்றுவரும்நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

ராமநாதபுரம் மாவட்டம் ஏராந்துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி, சக்தி ஆகியோர் வயிற்று வலிக்காக சிகிச்சை பெற ஏர்வாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

Advertisment

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

அப்போது அவர்களுக்கு சிப்ரோப்ளோக்சின் மாத்திரை கொடுக்கப்பட்டது. அந்த மாத்திரையானது இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பையோ ஜெனட்டிக் ட்ரக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை ஆகும். அந்த மாத்திரையை இரண்டாக உடைத்து உட்கொள்ளும்படி செவிலியர் அறிவுறுத்தஅந்த மாத்திரையை உட்கொள்ளஇரண்டாக உடைத்தபோதுஅந்த மாத்திரையின் நடுவில் ஸ்டேப்ளர் பின் அளவில் இரும்பு கம்பி இருந்தது. இதைக்கண்டு அதிர்ந்த பாண்டி தனக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையை உடைத்தபோதும் அதிலும் அப்படியே இருந்துள்ளது.

 The iron wire on the tablet given to the stomach in the govt hospital

இதுகுறித்து சக்தி மற்றும் பாண்டி ஆகியோர் மருத்துவமனை ஊழியர்களிடம் புகாரளித்த போது தெரியாமல் நடந்திருக்கும் என ஊழியர்கள்அலட்சியம் காட்டியதாக கூறினர்.

இந்நிலையில் சிப்ரோப்ளோக்சின் மாத்திரைகளைஅனைத்துமாவட்ட மருத்துவ கிடங்கிலிருந்தும் நீக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ramanathapuram govt hospital tablet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe