Advertisment

காவலாளி மீது விழுந்த இரும்பு கேட்- போலீசார் விசாரணை

Iron gate falls on guard - police investigate

தொழிற்சாலைகள் நிறைந்த சென்னை மணலி பகுதியில் ராட்சத இரும்பு கேட் மேலே விழுந்த சம்பவத்தில் காவலாளி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை மணலி பகுதியில் ஹரிகிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் குமாரசாமி என்ற 68 வயது முதியவர் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பணியில் இருந்த பொழுது குமாரசாமி நிறுவனத்தின் பெரிய இரும்பு கேட்டை திறந்து இருக்கிறார். அப்பொழுது திடீரென இரும்பு கேட் அவர் மேலே விழுந்தது.

Advertisment

சத்தம்கேட்டு அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து இரும்பு கேட்டை தூக்கி குமாரசாமியை மீட்டனர். இடுப்பு பகுதியில் எலும்புகள் உடைந்துசுயநினைவற்றநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் கொலை நோக்கம் இல்லாத மரணம் என அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident gate manali CCTV footage police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe