Skip to main content

“தொழிலாளர்களுக்காகவே கண் கருவிழி  பதிவு கருவி கொண்டுவரப்பட்டிருக்கிறது” - அமைச்சர் ஐ.பெரியசாமி   

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Iris recording equipment has been brought for  workers  says Minister I. Periyasamy

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில்  பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரல் ரேகை  சரியாகப் பதிவு செய்ய முடியாத நபர்களுக்குக் கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன்  பொருட்கள் வழங்குவதற்குத் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து  வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு கண் கருவிழி பதிவு செய்யும்  கருவி வழங்கும் விழா தாடிக்கொம்பில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட  ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல்,  தாடிக்கொம்பு பேரூராட்சி மன்றத்தலைவர் கவிதாசின்னத்தம்பி, கிழக்கு மாவட்ட பொருளாளர் கு.சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன்,  ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி மன்றத்தலைவர்  நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழங்கல் அலுவலர்  ஜெயசித்ரகலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு  கருவிழி பதிவு செய்யும் கருவியை வழங்கினார். அதோடு அங்கிருந்த பொதுமக்களிடமும் கருவிழி பதிவு செய்தும் காண்பித்தார்.   

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில்  பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விரல் ரேகை  சரியாகப் பதிவு செய்ய முடியாத நபர்களுக்குக் கருவிழி மூலம் பதிவு செய்து ரேசன்  பொருட்கள் வழங்குவதற்குத் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து  வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு கண் கருவிழி பதிவு செய்யும்  கருவி வழங்கும் விழா தாடிக்கொம்பில் நடைபெற்றது. 

Iris recording equipment has been brought for  workers  says Minister I. Periyasamy

ஒரு லட்சம் வீடுகள் இந்த வருடத்திற்கான இலக்காக  இருந்தாலும் எவ்வளவு பேருக்கு விரைவாக வீடுகள் கட்டிக் கொடுக்க  முடியுமோ அதன்படி எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் பயனாளிகளுக்கு  விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். மாதந்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யத்  திட்டமிட்டுள்ளோம். இடைத் தேர்தல் முடிந்த பின்பு அனைத்து பகுதிகளுக்கும்  சென்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை  உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.  

அப்போது  அங்குக் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சியில் துணைப் பதிவாளர் பொது விநியோகத்திட்டம் இரா.அன்புக்கரசன், பறக்கும்படை தாசில்தார் அபுரிஸ்வான், கூட்டுறவு ஒன்றிய  மேலாண்மை இயக்குநர் செல்வக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசு,  மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன்,தாடிக்கொம்பு பேரூராட்சி  எழுத்தர் மகாலிங்கம், மீனவரணி அமைப்பாளர் தாடிக்கொம்பு முருகேசன்,   தாடிக்கொம்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரமேஷ்,  திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ் உட்பட திமுக நிர்வாகிகள்  மற்றும் இளைஞரணியினர், சார்பு அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“வைகை அணையிலிருந்து ஆத்தூர் தொகுதிக்குக் குடிதண்ணீர் கொண்டுவரப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 I. Periyasamy said Drinking water will be brought from Vaigai Dam to Attur Constituency

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட என்.பஞ்சம்பட்டி, அம்பாத்துரை, செட்டியபட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி என்.பஞ்சம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.பாஸ்கரன், ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய செயலாளர் முருகேசன். ஆத்தூர் நடராஜன், ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழக மக்கள் நலனுக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் ஒப்பற்ற தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். திமுக ஆட்சிக்கு வரும் முன்னரே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வளம் வந்த மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளைத் தீர்க்க புகார்பெட்டி வைத்து அதன் மூலம் தமிழக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி தலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

தற்போது அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் செயல்படுத்த முடிவு செய்து வரும் திங்கள் கிழமை முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். காரணம் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு மத, ஜாதி இன வேறுபாடின்றி செயல்படக்கூடிய ஒரேதலைவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். சொல்வதை மட்டுமின்றி சொல்லாததையும் நிறைவேற்றி மக்கள் மனதில் 100 சதவீதம் நம்பிக்கை நட்சத்திரமாக நம் முதல்வர் உள்ளார்.

ஆத்தூர் தொகுதி மட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களின் குடிதண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க வைகை அணையிலிருந்து ரூ.565கோடி மதிப்பில் குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்பட உள்ளது. பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை, கோரிக்கை மனுக்களை நிறைவேற்றும் போது அவர்கள் தரும் ஆதரவுதான் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு மென்மேலும் நலத்திட்டங்களை செயல்படுத்த ஊக்கம் தரும். நீங்கள்  சிரித்தால்தான் நாங்கள் சிரிக்க முடியும். நீங்கள் வருத்தப்பட்டால் நாங்களும் வருத்தத்துடன் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

நான் பஞ்சம்பட்டிக்கு எப்போது வந்தாலும் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறேன். காரணம் எனக்கு என்றும் ஆதரவு தரும் கிராமங்களில் பஞ்சம்பட்டி ஊராட்சியும் ஒன்றும் இப்போது இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இன்று இரவே அதற்கான பணிகள் தொடங்கும் இது உறுதி. மேலும் மாணவர்கள் நலன் கருதி கூடுதலாக கழிப்பறை வசதியும் செய்துகொடுக்க உத்தரவிட்டுள்ளேன். அந்தப் பணியும் விரைவில் தொடங்கும். இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் அனுப்பும் மனுக்கள் முறையாக தாலுகா அலுவலகங்களுக்கு வருவதில்லை. இதை மாவட்ட ஆட்சியர் கண்கானிக்க வேண்டும்.

காரணம் 7தொகுதிக்கும் கண்கானிக்க கூடியவர் நம்முடைய மாவட்ட ஆட்சியர். இனிமேல் இ-சேவை மையங்கள் மூலம் அனுப்பப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அந்தந்தப் பகுதி வட்டாட்சியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இம்மாதிரி முகாம்கள் மூலம் தமிழகத்தில் ஒரே நாளில் லட்சகணக்கான மக்கள் பயன்பெருகிறார்கள். இந்தத் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்பின்னர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் இடங்களுக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்ததோடு பதிவு செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.

Next Story

“கிராமங்கள்தோறும் அடிப்படை வசதிகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அயினாம்பாளையம், பெரியார்நகர், முத்தியால்பேட்டை, தென்னம்மாதேவி, பூத்தமேடு மாரியம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, காட்டு நாயக்கன் தெரு, ஆதிதிராவிடர் காலனி உட்பட பல கிராமங்களுக்கு நடந்து சென்று பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியும் ஆகியோர்  பொதுமக்களிடம் பேசியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “திமுக தலைவர் கலைஞர் வழியில் வந்த  மக்களின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் ஜாதிமத இன வேறுபாடின்றி அனைத்து  நலத்திட்டங்களும் அனைவருக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் வளர்ச்சி அடைந்து வருகிறது. முதல்வரின்  கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் கிராமப்புறங்களை நகரங்களுடன் இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டதால் கிராமப்புற மக்கள் எளிதாக அருகில் உள்ள நகரங்களுக்கு செல்ல முடிகிறது. போக்குவரத்து வசதி கிராமப்புறங்களுக்கு கிடைப்பதோடு கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் விவசாயிகளின் விளைபொருட்கள் எளிதாக நகரங்களுக்கு கொண்டு சென்று  விற்பனை செய்ய முடிகிறது.

Basic facilities will be provided in every village in Vikravandi  says Minister I. Periyasamy

இங்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு அமைச்சர் அர.சக்கரபாணியும் வந்துள்ளார். நீங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்களிடம் கோரிக்கை வைத்த பேருந்து நிறுத்த வசதி, பொதுக்கழிப்பறை வசதி, சாலை வசதிகள் தங்கு தடையின்றி குடிதண்ணீர் வசதி கிடைக்க உட்பட அனைத்தும் தேர்தல் முடிந்தபின்பு படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்களின் முக்கியமான கோரிக்கையான பகுதிநேர நியாயவிலைக்கடை உடனடியாக அமைத்துக் கொடுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வதின் மூலம் உங்கள் கிராமங்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் எளிதாக வந்தடையும்.” என்று கூறினார். 

தேர்தல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.நாகராஜன், மார்கிரேட்மேரி, பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் சாணார்பட்டி விஜயன், கோலியனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் க.மும்மூர்த்தி, சோழாம்பூண்டி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், தெய்வசிகாமணி, திண்டுக்கல் மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய திமுக செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஆத்தூர் முருகேசன், நத்தம் பேரூராட்சி மன்றதலைவர் சிக்கந்தர் பாட்சா அகரம் பேரூராட்சி மன்றதலைவர் நந்தகோபால் உட்பட கட்சிபொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.