/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SHIP1.jpg)
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கிற இந்தியர்கள், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக வேலையின்றித் தவிக்கின்றனர். எனவேஅவர்கள் தாயகம் திரும்புவதற்காக இந்திய அரசிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அவர்களை இந்தியா கொண்டு வரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் குறிப்பாக தமிழர்கள் உட்பட இந்தியாவின் பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SHIP2.jpg)
ஆபரேஷன் சமுத்ரசேது திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜூன் 2-ல் இலங்கையிலிருந்து 700 பேர்கள், ஜூன் 7-ல் மாலத்தீவிலிருந்து 700 பேர்கள் என தொடர்ந்து ஐ.என்.எஸ். ஜலஷ்வா, மற்றும் ஐராவத் கப்பல்களில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்ததில் முறையான சோதனைக்குப் பின்பு பேருந்துகளில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SHIP333.jpg)
தற்போது ஈரான் மற்றும் அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில், அங்கு மீன் பிடித் தொழிலுக்குச் சென்ற 687 மீனவ இந்தியர்கள் கடந்த ஜூன் 25 ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து ஐ.என்.எஸ்.சின் ஜலஸ்வா கப்பல் மூலம் கிளம்பியவர்கள் 01/07/2020 காலை 09.00 மணியளவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் துறைமுகசபை பொறுப்புக் கழக நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SHIP 4333.jpg)
ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் அங்கே மீன் பிடிக்கச் சென்றவர்கள். தற்போதைய கரோனா நெருக்கடி உயிர் அச்சம் காரணமாக வேலையில்லாமல் தவித்தனர். தாயகம் திரும்புவதற்காக தவித்தவர்களைஇந்திய அரசு,ஆபரேஷன் சமுத்ர சேது-2 திட்டத்தின் அடிப்படையில் அழைத்து வந்துள்ளது. இவர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 514, கேரளாவின் 38, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 33 பேர்அடங்குவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_648133338996.jpg)
துறைமுகம் வந்தடைந்த அவர்களுக்கு உடனடியாக தெர்மல் ஸ்கேனிங் செய்யப்பட்டது. பின்னர் குடிவரவு நுழை மற்றும் உடைமை சோதனைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. அதன்பின் இவர்கள் தங்களின் சொந்த மாநிலம், சொந்த மாவட்டங்களுக்கு துறைமுக சபை பொறுப்புகழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)