இந்திய நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக விடுதலை வேண்டி போராடிய பல தலைவர்கள் வயது மூப்பு காரணமாக மறைந்துவிட்டார்கள். அந்த விடுதலைப் போராட்டத்தில் எஞ்சி நிற்கும் கம்பீர போராளி என்றால் தமிழகத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு தான்...!
கடந்த (20/08/2020) இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவர், அருகே வசிக்கும் தனது பேரனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு அந்த நள்ளிரவிலேயே அவரை அழைத்துக்கொண்டு சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அட்மிட் செய்தார் அவர் பேரன்.
கடந்த 21 ஆம் தேதிகாலை அவருக்குகரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத் தொற்றும் இல்லை என்று தெரிந்தது. தொடர்ந்து அவருக்குமருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டநிலையில், லேசாக சளி இருந்ததால், சிகிச்சையில் இருந்த அவர் தற்பொழுது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்துவீடு திரும்பினார்.