IPS Transfer of Officers TamilNadu Govt

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப்பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரனும், மதுரை மாவட்ட துணை ஆணையராக பாலாஜியும், கோவை சிவில் சப்ளை சிஐடி காவல் கண்காணிப்பாளராக சந்திரசேகரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு காவல் இணை ஆணையராக தர்மராஜனும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல் தடுப்பு பிரிவு ஐஜியாக தமிழ்சந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் டான்ஜெட்கோ (TANGEDCO) கண்காணிப்பு பிரிவு ஐஜியாக பிரமோத் குமாரும், சென்னை சிறைத்துறை ஏடிஜியாக மகேஸ்வர் தயாளும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக கல்பனா நாயக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காகித ஆலை நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அம்ரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமய்சிங் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.