I.P.S. Tamil Nadu government order to transfer the officers!

Advertisment

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, உளவுத்துறையின் ஐ.ஜி.யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த ஆசியம்மாள், அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

காவல்துறை நவீன மயமாக்கல் பிரிவு உதவி ஐ.ஜி.யாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ஏ.எஸ்.பி.க்களாக இருந்த சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவாச்,ஹர்ஷ் சிங், சாய் பிரணீத்ஆகியோருக்கு எஸ்.பி.க்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.