/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt 89999_2.jpg)
இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.ராஜேஷ் தாஸ், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக (கூடுதல் டி.ஜி.பி) ஜெயந்த் முரளியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநராக உள்ள டி.ஜி.பி. விஜயகுமார் ஓய்வு பெறுவதால் ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us