Advertisment

கலைஞர் மறைவையொட்டி  பிறந்த நாளை புறக்கணித்த ஐபிஎஸ்!

ips

தேவர் ஜெயந்தியான முத்துராமலிங்கதேவர் பிறந்த நாளான அக்டோபர் 30ம்தேதி தான் திண்டுக்கல்லை சேர்ந்த கழக துணை பொதுச்செயலாளரும் முன்னால் அமைச்சருமான ஐ.பெரியசாமி மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமாரின் பிறந்த நாள் ஆகும். ஐபிஎஸ் பிறந்தநாளில் மாவட்ட அளவில் உள்ள கட்சிபொறுப்பாளர்களும், அங்கங்கே பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், போஸ்டர்கள் அடித்தும் ஐபிஎஸ்- சை வாழ்த்துவது வழக்கம்.

Advertisment

அதோடு தினசரி பேப்பர்களிலும் விளம்பரம் கொடுத்து வாழ்த்துவார்கள். அதுபோல் ஐபிஎஸ், தனது பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடுவார். மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் ஐபிஎஸ் வீட்டுக்கு சென்று மாலை சால்வை புத்தகங்களை கொடுத்து வாழ்த்தி விட்டு செல்வது நடைமுறையாக இருந்து வந்தது.

Advertisment

ஆனால் இந்த ஆண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் உடல் நிலை சரியில்லாமல் திடீரென இறந்தார். முன்னாள் தலைவர் கலைஞர் திடீரென இறந்ததையொட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என கடந்த பத்து நாட்களுக்கு முன்பே ஐபிஎஸ் அறிக்கை விட்டு இருந்தார்.

அதை தொடந்து தான் இன்று அக்டோபர் 30ம் தேதி ஐபிஎஸ் தனது பிறந்த நாளை கலைஞருக்காக கொண்டாடாமல் புறக்கணித்து விட்டார். ஆனால் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தலைவர் ஸ்டாலினுடன் குரு பூஜையில் கலந்து கொண்டு பசுபொன் முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அளவில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

ips
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe